‘விடாமுயற்சி’ சிறப்பு காட்சிக்கு அனுமதி!
லைகா நிறுவனம் தயாரிப்பில்,அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’.இப்படத்தில் அஜித்துடன், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான BREAK DOWN படத்தின் தழுவலாக, உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்,இப்படம் நாளை ( பிப்ரவரி 6 ) வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சிறப்பு காட்சிகான அனுமதி கேட்டு, படக்குழு சார்பில் வரும் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சியினை காலை 9 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில்,
இது தொடர்பாக அரசாரணைவெளியாகியுள்ளது. அதில்,”லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘விடாமுயற்சி’ திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிப்.6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கோரப்பட்டது. அதன் அடிப்படையில், பிப்.6-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஒரு சிறப்புக் காட்சியை தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. முறையான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிடலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.