ரஜினிகாந்த் பாரட்டிய ‘சாருகேஷி’ !
தமிழ்த்திரையுலகில் 60 70களில் வெற்றி பெற்ற நாடகங்களை படமாக்குவது வழக்கமாக இருந்தது ( எ க ) UAA நாடக குழுவின் கண்ணன் வந்தான் நாடகம் சிவாஜி நடிப்பில் ‘ கௌரவம் திரைப்படமாக வெளிவந்து மெகா வெற்றி பெற்றது அந்த வரிசையில் தற்போது யு ஏ ஏ நாடக குழுவின் அடுத்த திரை வரவு ஒய் ஜி மகேந்திரன். நடித்த சாருகேசி நாடகம் அதே தலைப்பில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது. இதன் பிரத்யேக காட்சி, சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துக்காக திரையிடப்பட்டது. அந்தப் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார், வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த படைப்பை தான் ரசித்து பார்த்ததாக பாராட்டினார்
சாருகேஷியாக வரும் நாயகன் (ஒய்ஜி மகேந்திரன்) பெரும் இசைமேதை. இவரின் இசைக்கு மயங்காத இசைபிரியர்கள் இல்லை இவர் மேடை ஏறினால் தாள சத்ததை மீறி கைதட்டல் காதை பிளக்கும். இவர் ஆலாபனை பண்ணாத ராகங்களே கிடையாது இப்படிபட்ட மனிதருக்கு அல்சைமர் டிசிஸ் எனும் மறதி நோய் க்கு உள்ளாகிறார். இந்த நோய்க்கு உட்பட்டவர்கள் மனைவி மக்கள் நண்பர்கள் என் அனைவரைம் மறந்து தன்னையே யார்? என்று தெரியாமல் மறந்து விடுவார்கள். இந்த நோயின் தாக்கத்துக்கு ஆளான yGM நிலைமை என்ன ? கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அதிசயம் நடைபெறுகிறது. அது என்ன என்பது தான் இப்படத்தின் சுவாரசியமான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்.இதில், சுகாசினி, சமுத்திரகனி, சத்தியராஜ், தலைவாசல் விஜய், ஜெயபிரகாஷ், மதுவந்தி என ஒரு நட்சத்திர பட்டாளமீ திரண்டு நடித்துள்ளது.அறிமுக நாயகன் ரித்விக் ஒய் ஜி மகேந்திரனின் இளம் வயது நாயகனாக அறிமுகமாகிறார் இவர் ஒய் ஜி மகேந்திரனின் பேரனும் மதுவந்தியின் மகனுமாவார்.தேவா.இசையமைத்திருக்கிறார்.