‘பராசக்தி’ படக்குழுவினருக்கு எஸ்.கே. கொடுத்த ‘பிரியாணி’ விருந்து !

‘அமரன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மிகுந்த உற்சாகத்திலிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர். முருகதாஸின் இயக்கத்தில்,துப்பாக்கி படத்தின் 2 ம்பாகம் என கூறப்பட்டு வரும் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த  கையோடு, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’  படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன்,அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில்,சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளை பராசக்தி படப்பிடிப்பு தளத்தில்  படக்குழுவினருடன்  கொண்டாடி இருக்கிறார்.  பிறந்தநாள் ட்ரீட் ஆக படக்குழுவினருக்கு  பிரியாணி விருந்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.சிவகார்த்திகேயன் பராசக்தி படக்குழுவினருக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறும் வீடியோவை அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.