தனுசுடன் சரண்யா பொன் வண்ணன் நடனம்! வைரலாகும் வீடியோ!!
சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் அறிமுக நடிகரான பவிஷின் நடிப்பில்,வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.இப் படத்தில் பவிஷுக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடன் இணைந்து தனுஷ் நடனமாடி பவிஷுக்கு சொல்லித்தரும் வீடியோவை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளார்..
சமீப காலமாக அம்மா கதாபாத்திரத்தில் ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன், கீதா கைலாசம் உள்ளிட்ட சில நடிகைகள் நடித்து வந்தாலும் சரண்யா பொன்வண்ணன் தான் டாப் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.தமிழ்த்திரையுலகில் தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், பரத் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் தனுஷின் அக்கா மகன் பவிஷுக்கும் 54 வயதில் அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
View this post on Instagram