ஜெயலலிதா வீட்டில் நடிகர் ரஜினிகாந்த்!
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,“இந்த போயஸ் கார்டன் வீட்டுக்கு நான்காவது முறையாக வருகிறேன். 77ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் நான் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அவர் என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அப்போது முதல் முறை வந்திருந்தேன். இரண்டாவது தடவை ராகவேந்திரா கல்யாணமண்டபம் திறப்பு வில்லாவுக்கு அவங்களை கூப்படணும்னு சொல்லிட்டு வந்தேன் மூணாவது தடவை பொண்ணு கல்யாணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு இங்கே வந்திருந்தேன்.இது நாலாவதுதடவை அவங்க இல்லைன்னு சொன்னா கூட அவங்க நினைவு எப்பவுமே எல்லார் மனதிலேயும் இங்கே இருக்கும். இங்கே வந்து அவங்க வீட்டுல அஞ்சலி செலுத்தி அவங்களுடைய இனிப்பான சுவையான நினைவுகளோட போயிட்டு இருக்கு அவங்க நாமம் வாழ்க.இவ்வாறு அவர் கூறினார்
Related Posts
|
|