தனுஷ் நடிக்கும் படத்தின் கதை இது தான்!- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

 

நடிகர் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து அடுத்ததாகஇட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.  விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை தொடர்ந்து,சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும்  நடித்து முடித்துள்ளார். மேலும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு இந்தி படத்திலும் நடித்துவருகிறார். மேலும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.இப்படம் குறித்து  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜ்குமார் பெரியசாமி; தனுஷ் படம் குறித்து பேசுகையில், “என்னுடைய அடுத்த படத்தில்  நடிகர் தனுஷ் இணைந்திருக்கிறார். அவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்தப் படம் இருக்கும். அதேசமயம் இந்தப் படத்தின் கதை அவருக்காக தயார் செய்யப்பட்டது இல்லை. அவர் எனக்கு முதல் சந்திப்பிலேயே மிகப்பெரிய சுதந்திரத்தை கொடுத்தார் என்பதுதான் உண்மை. என் மீது மிகவும் நம்பிக்கை வைத்து,எந்தக் கதையாக இருந்தாலும் நடிப்பதற்கு தயார் என்றே   கூறினார்.அவர் எனக்கு எந்த கண்டிஷனையும் போடவில்லை. பிறகு நான் இரண்டு கதைகளை உருவாக்கினேன். இரண்டாவது சந்திப்பின்போது அந்த இரண்டு கதைகளையும் நான் கூறினேன். இரண்டுமே அவருக்கு பிடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இரண்டிலிருந்து ஒரு கதையை தேர்ந்தெடுத்தார். அது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை” இவ்வாறு அவர் பேசினார்.