சுழல் 2 நடிகையை அறைக்குள் அழைத்து அத்து மீறி நடந்த இயக்குனர்!

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த  1991 ஆம் ஆண்டு வெளியான,  ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஸ்வினி என்ற ருத்ரா தொடர்ந்து கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர், மலையாள திரையுலகில் களம் புகுந்தார் . திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் சென்ற இவர் தற்போது சிங்கப்பூரில் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.தற்போது   புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘சுழல் 2’ வெப் தொடரில் அஸ்வினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அஸ்வினி
தான்  சினிமா படப்பிடிப்பு ஒன்றில்  சந்தித்த ஒரு மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில்,’ நான் படப்பிடிப்புக்கு எப்போதும் அம்மாவுடன் செல்வேன், அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை வரவில்லை.மேக்கப் போட பெண் கலைஞர் இருந்ததால் சென்றேன், அன்று இயக்குனர் என்னை மேலே கூப்பிட்டார்.அப்போது என்னுடன் இருந்த பெண்ணை அழைத்தேன் வரவில்லை, அப்போது எனக்கு மிகவும் சின்ன வயது. ரூமிற்கு அழைத்து என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். நான் அங்கிருந்து கீழே வந்ததும் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டேன்.என் அம்மாவிடம் கூறினேன், அவர் மனமுடைந்து அழுதுவிட்டார். அவரிடம் கூறி அவரையும் அழ வைத்து விட்டோமே என்ற கஷ்டம் அதிகம் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் எந்த பட இயக்குனர் என்பது பற்றி அவர் கூறவில்லை.