கிரைம் திரில்லராக உருவான ‘டென் ஹவர்ஸ்’ !
டுவின் ஸ்டுடியோஸ் பேனரில் லதா பாலு, துர்காயினி வினோத் தயாரித்திருக்கும்புதிய படம், ‘டென் ஹவர்ஸ்’ வெறும் பத்து மணி நேரத்தில் மொத்த கதையும் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில்,சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் காவல் அதிகாரியாக சவாலான வேடத்தில் சிபிராஜ் நடிக்க, இவருடன் சரவணன், கஜராஜ், ராஜ் ஐயப்பா, தங்கதுரை, குரேஷி, முருகதாஸ், ஷாரு மிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒடும் பேருந்தில் ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார் இப்படம் குறித்து இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் கூறுகையில்,” இப்படம் ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர் ஆகும்.ஒரு இரவு, ஒரு பேருந்து, ஒரு கொலை, 25 பயணிகள் என்பதுதான் ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் கதைக்களம். பஸ்ஸில் பயணம் செய்யும் 25 பேரில் ஒருவர் தான் கொலையாளி. அவர் யார் என்பதையும் எதற்காக இந்த கொலை நடந்தது என்பதையும், அந்த கொலைகாரனை சிபிராஜ் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை யாரும் யூகிக்க முடியாத வகையில் கூறி இருக்கிறோம்,” என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை கார்த்திக் வெங்கட்ராமன் கவனிக்க,கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தை வரும் ஏப்ரல் 18ம் தேதி ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.