‘தக் லைஃப்’: ‘லிப் லாக்’ காட்சியில் தெறிக்க விட்ட உலக நாயகன்!

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி, கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் ’தக் லைஃப்’. படத்துக்காக இணைந்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 16ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்ற நிலையை கருத்தில் கொண்டு ’தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி மற்றும் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் தேதி என அடுத்தடுத்த நிகழ்வுகளை அறிவித்துள்ளனர் ’அதன்படி இன்று மாலை 5 மணிக்கு தல் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் படி, சிம்பு கமலின் வளர்ப்பு மகன் என்பதும், இரண்டு பேரும் கேங்ஸ்டர்கள்; ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் மோதல் உருவாகி யார் வெல்கிறார்கள்; அதிகாரம் யார் வசம் செல்கிறது என்பதுதான் கதை என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த டிரைலரில்,மீண்டும் காதல் மன்னனாக முத்தக்காட்சியில் தெறிக்கவிட்டுள்ளார் விடலைகள் சூடாகும் அளவுக்கு அபிராமிக்கு ஒரு லிப் லாக் வைக்கும் கமல்ஹாசன், திரிஷாவுடனும் ரொமான்ஸ் செய்கிறார்.இதன் மூலம் இப்படத்தில் கமலுக்கு அபிராமி, திரிஷா என இருவருமே ஜோடி என தெரிய வருகிறது. இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி சென்னை தனியார் கல்லூரியில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழ  நடைபெறவுள்ளதாகவும் இந்நிகழ்வில்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இசைக்குழுவினருடன் நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..