விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார் . தற்போது நடிகர் சங்க கட்டிட இறுதிக்கட்ட  பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.இந்நிலையில், நடிகர் விஷால் பேட்டி ஒன்றில், “நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆக.15 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அடுத்து என்னுடைய திருமணம் நடக்கும். எனது  குடும்பத்தினர்   பெண் பார்த்து, பேசி முடித்துவிட்டனர் ,  இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். கடந்த ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன்,“ஆகஸ்ட் 29ஆம் தேதி எனது பிறந்த நாள் என்பதால் அந்த நாளில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.’, என்றும்   தெரிவித்திருந்தார்.இந்நிலையில் விஷால் காதலித்து வரும் பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அந்த பெண், நடிகை சாய் தன்ஷிகா என்றும்,கடந்த 2017-ல் செப்டம்பர் 28-ம் தேதி சாய்தன்ஷிகா நடித்த ‘விழித்திரு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தன்ஷிகா பேசியபோது, விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.ராஜேந்தரின் பெயரை குறிப்பிடவில்லை. அடுத்து பேசிய டி.ராஜேந்தர், ‘இந்த விழித்திரு படத்தில் நடித்தபிறகுதான் கபாலியில் நடித்தார் தன்ஷிகா. சூப்பர் ஸ்டாருடன் நடித்ததால் இந்த ராஜேந்தரை அவருக்கு தெரியவில்லை. நீயெல்லாம் என பெயரைச் சொல்லியா, என்னை உலகுக்கு தெரியப் போகிறது? ஹன்சிகாவைப் பற்றியே கவலைப்படாத நான் தன்ஷிகாவைப் பற்றியா கவலைப்படுவேன்?’ என காட்டமாக பேசினார் அப்போது இடையிடையே தன்ஷிகா குறுக்கிட்டு, மன்னிப்பு கேட்டார். டி.ஆரின் காலையும் தொட்டு கும்பிட்டார். ஆனால் அவரை பேசவும் விடாமல், தானும் சமரசம் ஆகாமல், ‘மைக் உங்கிட்ட இருக்கும்போதே நீ பேசியிருக்கணும். 10 மாதத்தில பெத்தாதான் பிள்ளை. அப்புறம் வயிற்றில் இருந்தால், செத்துரும்’ என அவரை காயப்படுத்தும் விதமாக வசனத்தை டி.ஆர் எடுத்துவிட்டார்.பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் நடிகர் விஷால் தன்ஷிகாவிற்கு ஆதரவாக  நின்றதாகவும் அப்போது ஏற்பட்ட நட்பே ஒரு கட்டத்தில் காதலாகவும் மாறியது என்கிறார்கள். இவர்களின் காதலுக்கு தற்போது இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், விரைவில் இவர்களது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் இவர்களின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவிற்கு பின்னர் அதே மாதத்தில் 29ம் தேதி நடக்கும் என்றும் விஷாலின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில்  இன்று மாலை  சாய்தன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ள  ‘யோகிடா’ பட  விழா சென்னையில் நடந்தது.இவ்விழாவிற்கு நடிகர் விஷால், சாய் தன்சிகாஇருவரும் ஒன்றாக வருகை தந்தனர்.இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் பேரரசு, “இது படவிழாவா, நிச்சயதார்த்த விழாவா என்றே தெரியவில்லை. விஷால் சார், எனக்கு வருத்தம். கொஞ்ச நாள் கிசு கிசுவை பரவவிடணும், அதுக்கு அப்புறம்தான் இதை சொல்லணும். நீங்க பொசுக்குன்னு வந்து ஜோடியா உட்கார்ந்துடீங்க. நேரா கிளைமாக்ஸை இப்போவே விட்டுடீங்க” என்று கூறியாதும் விஷால் தன்ஷிகா இருவரும் வெட்கத்துடன் சிரித்தனர்  தொடர்ந்து  நடிகை தன்ஷிகாவும் விஷாலுடனான திருமண தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆகஸ்ட் 29-ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்