நடிகர் ரவி மோகன் ஆர்த்தி ரவி ஆகியோரின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரவிமோகன்,விவாகரத்துக்கு மூலகாரணமாக கிசுகிசுக்கப்படும் பாடகி கெனிஷா உடன் புதுமண தம்பதிகள் போல ஜோடியாக கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. .இது குறித்து ஆர்த்தி ரவி பரபரப்பு ஒன்றை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதற்கு பதிலடியாக ரவி மேகன் வெளியிட்ட அறிக்கையும் வைரல் ஆனது. அந்த அறிக்கையில்,ஆர்த்தியின் அம்மா சுஜாதாவின் மீதும் ரவிமோகன் புகார் கூறியிருந்தார். அதை தொடர்ந்து ரவிமோகனின் மாமியாரும் ஆர்த்தியின் அம்மாவுமான சுஜாதா தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி அறிக்கை போர் தொடுத்து வரும் நிலையில்,
இது குறித்து தற்போது பாடகி கெனிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,, “இந்த சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது. எனது ஆன்மாவின் கஷ்டம் தனியாகத்தான் நிற்கிறது. அதேசமயம் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கின்றன. மேலும் நான் இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.












