‘சுகர்பேபி’ ரகசியத்தை சொல்லாதீங்க…. திரிஷாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட தடை!
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக கலக்கி வருகிறார்.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் ‘சுகர்பேபி’ யாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலரில் இடம்பெற்ற இவரது காட்சிகள் ரசிகர்கள் மத்தியில்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல், சிம்பு இருவருடனும் தனித்தனியே ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரிஷா,இப்படத்தில் இருவருடனும் இணைந்து நடித்துள்ளார் .இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை திரிசாவிடம்,கமல், சிம்பு இவர்களுடன் யாருடன் நடிப்பது கஷ்டமாக இருந்தது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இக்கேள்விக்கு நடிகை திரிஷா பதிலளிக்கையில்,”இந்தப் படத்துல இவங்க ரெண்டு பேருடனும் நடித்தது கஷ்டமாக இல்லை. ஏன்னா, இவங்க ரெண்டு போரையும் எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ரெண்டு பேர் கூடவும் நான் ஏற்கனவே ஜோடியா நடிச்சிருக்கேன். என் திரையுலக பயணத்தில் கமல் சார் எனக்கு வழிகாட்டியா இருந்திருக்கிறார். சிம்பு கூட எனக்கு ரொம்ப நல்லா தெரியும். நாங்க இருவரும் இணைந்து இரண்டு படம் பண்ணியிருக்கிறோம். ஸோ, நான் ‘தக்லைப்’ படத்துக்குளள நுழையும் போது, எனக்கு அது பாதுகாப்பாகவும், மிகவும் சௌகரியமாகவும் உணர்ந்தேன். . மணிரத்தினம் சார் படக்குழுவுடனும் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளதால் எனக்கு எந்த கஷ்டமும் தெரியல.எனது ‘சுகர் பேபி’ கேரக்டர் பெரிதும் பேசப்படும் இதில் நான் யாருக்கு ஜோடியாக வருகிறேன் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.என்றார்.
அப்போது அருகில் அமர்ந்திருந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், ‘அது பரம ரகசியம் வெளியே சொல்ல கடாது’ எனக் கூறி சிரித்தார்.இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான செகண்ட் சிங்கிள் பாடலாக “வெளியான சுகர் பேபி” பாடல் லிரிக் வீடியோவில், நடிகை திரிஷா ரெக்கார்டிங் ரூமில் பாட்டுப் பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இந்த படத்தில் த்ரிஷா சொந்தக் குரலில் பாடியிருக்கிறாரா என ஷாக் ஆகிவிட்டனர். ஆனால், பாடலை அலெக்ஸாண்ட்ரா ஜாய், சுபா, சரத் சந்தோஷ் உள்ளிட்டோர் தான் பாடியுள்ளனர்.