முதல்வராக வேண்டும் என நான் அரசியலுக்கு வரவில்லை.! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு!!
கமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசுகையில்,”ரசிகர்களாகிய உங்களின் பிரதிநிதியாக, கன்னட சூப்பர் ஸ்டார் இங்கு வந்துள்ளார். ஆனால், அவர் இங்கு தன்னை சூப்பர் ஸ்டாராக அடையாளப்படுத்தவில்லை. ஒரு மகனாக, ஒரு ரசிகனாக, உங்களின் பிரதிநிதியாக வந்துள்ளார். இந்த அன்புக்கு நான் எப்படி அடிபணியாமல் இருக்க முடியும்? தம்பி எஸ்டிஆர் , நீங்கள் பயணிக்கப் போகும் தூரம் எனக்குத் தெரியும். உங்களுக்கும் புரியும். உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்தக் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்தப் பொறுப்புடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறீர்கள். ஆனால், அந்தப் பொறுப்பு இன்னும் வளர்ந்திருக்கிறது. அது சுமையல்ல, சுகம். அதை அனுபவியுங்கள். அதைப் பார்த்து நானும் அனுபவிப்பேன்!‘விஸ்வரூபம்’ பிரச்னையின்போது எல்டாம்ஸ் ரோட்டில் நின்றவர்களில் நானும் ஒருவன் என்று அசோக் செல்வன் கூறியது போல, என்னுடன் இருந்த பல ரசிகர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்வது? அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். முதல்வராக வேண்டும் என்று நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக ஒரு எம்.எல்.ஏ. ஒரு தொகுதிக்காக என்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் மெதுவாகச் செய்து கொண்டிருக்கிறோம்.ஏனெனில், நாங்கள் தனி மனிதர்கள். என்னுடன் இளம் வயதில் உழைத்த தம்பிகள் இன்று சமூகத்தில் பெரிய மனிதர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அதேபோல, உங்களுடைய தம்பிகளும் இருக்க வேண்டும் சிம்பு” .இவ்வாறு அவர பேசினார்