நடிகர் ராஜேஷ் மறைவு! அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி !!
நடிகர் ராஜேஷ் கடந்த 1949 இல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தார். திண்டுக்கல், வடமதுரை, மேலநாதம் அணைக்காடு, சின்னமனூர் தேனி மாவட்டங்களில் பள்ளிப்படிப்பை முடித்தார் .காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி. யு. சி முடித்த பிறகு, இவர் பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். புரசைவாக்கத்தில் உள்ள புனித பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் 1972 முதல் 1979 வரை திருவல்லிக்கேணியிலுள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.இந்நிலையில்,கடந்
. நடிகர் ராஜேஷ் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,”-தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ். முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். கலைஞரும், ராஜேஷின் திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம்.கலைஞர் மறைவுற்றபோது, \”தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்\” என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர்கமல்ஹாசன்தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்
ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,”என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்”.இவ்வாறு அவர் கூறியுள்ளார்