கன்னட மொழி சர்ச்சை: ‘அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது’! கமல்ஹாசன் திட்டவட்டம்!!

நடிகரும்; மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடிப்பில்,, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் . இந்நிலையில் சென்னையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்,மற்றும் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கமல்ஹாசன் பேசுகையில்,”“ உயிரே, உறவே, தமிழே.. இந்த இடத்தில் இது தான் என்னுடைய குடும்பம். அதன் காரணமாகவே சிவராஜ்குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன் காரணமாகவே எனது பேச்சை உயிரே, உறவே, தமிழே என தொடங்கினேன். உங்கள் மொழியான கன்னடமும் தமிழில் இருந்து தான் பிறந்தது. எனவே நீங்களும் எனது குடும்பத்தின் ஒரு அங்கம் தான்” என கமல்ஹாசன் பேசினார். இந்நிலையில்,அவரின் கன்னட மொழி தொடர்பான கருத்துக்கு கன்னட அமைப்பினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அம்மாநில பாஜக மாநில தலைவர் விஜயேந்தர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால் அதற்காக பிற மொழிகளை அவமதிப்பது அநாகரீகமான செயல்.. எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது என்பதை வரையறுக்க கமல்ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல.கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார்
இந்நிலையில். கேரளாவில் நடந்த தக் லைப் புரமோஷன் நிகழ்வில் பேசிய கமலஹாசன், “அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர். நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் தான் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர், தமிழர், கர்நாடகாவை சேர்ந்த அய்யங்கார் என பலர் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்தது இல்லை.கர்நாடகாவில் பிறந்தது தமிழகத்தில் முதலமைச்சர் ஆகியவருக்கு ஒருமுறை பிரச்சினை என்று வந்தபோது கன்னடர்கள் ஆதரவு கொடுத்தததுடன், அந்த முதலமைச்சரை மீண்டும் கர்நாடகத்துக்கே வருமாறு அழைத்தனர். எனவே தக் லைஃப் படத்தையும் மற்றும் கமல்ஹாசனையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழிகள் குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அதற்கான கல்வியறிவு அவர்களுக்கு இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே இந்த விஷயம் குறித்த விவாதத்தை வரலாற்று அறிஞர்களிடம், மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம். நான் பேசியது சிவராஜ்குமார் மீதான அன்பில் வந்தவை. நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பார்வையில் இருந்தால் பார்த்தால் அவர்கள் சொல்வது அவர்களுக்கு சரியாக இருக்கும். அதுவே, தென்குமரி பக்கம் இருந்து பார்த்தால் நான் சொன்னது தான் சரியாக இருக்கும். இதில் மூன்றாவது கோணம் உள்ளது. அது நான் சொன்னதுபோல் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை. அவர்கள் இந்த இரண்டுமே சரி என்பார்கள். ஆனால், கன்னடர்கள் நமது குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வடக்கில் இருந்து வந்த மொழியை சேர்ந்தவர்களா எனபதை வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்வார்கள். இது பதில் இல்லை, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.