குப்பைத் தொட்டிக்குள் ராஷ்மிகாவுடன் 7 மணி நேரம் இருந்த தனுஷ்!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர்,நடிபில் உருவாகியுள்ள புதிய படம் குபேரா.  இப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகஉள்ள நிலையில் , இப்படத்தின் மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ்,பேசுகையில்,
 ‘சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவங்களை கொடுத்தது. அதேசமயம் கொஞ்சம் மோசமான அனுபவத்தையும் கொடுத்தது. எனக்கும் ராஷ்மிகாவுக்கும் குப்பைத் தொட்டியில் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு மணிநேரம் வரை ஷூட் இருந்தது. அப்போது நான் ராஷ்மிகாவிடம் என்ன இப்படி நாற்றம் அடிக்கிறது என்றேன். அதற்கு அவரோ சார், எனக்கு எதுவுமே நாற்றம் அடிக்கவில்லையே என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் கண்டிப்பாக அனைவரையும் கவரும்” என்றார். முன்னதாக விழா மேடையில்  தனுஷ், தமிழில் பேசியதைக் கேட்டதும் அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.