அடப் பாவிகளா ,வக்கிரப் பிறவிகள் !

அனிருத்துடன்  அரபி குத்துப் போட்டவர் அந்த பாடகி.

இயக்குநர் மணிரத்னத்தின் ஓகே கண்மணி இவரது  பெயரை அறிமுகம் செய்தது. கனடா நாட்டு குயில். தமிழ் ,தெலுங்கு ,இந்தி என சுற்றிக்கொண்டிருக்கிறார் ஜோனிடா காந்தி . தற்போது இன்டர்நேஷனல் அளவில் மேடைக் கச்சேரிகள் செய்து கொண்டிருக்கிறார். 

இன்ஸ்டிராகிராம் வைத்து இருப்பவர்களில்  பலர் சந்திக்கும் அவலங்களை ஜோனிடாவும் அனுபவித்திருக்கிறார். 

யாரோ ஒரு ஆணழகன் பிறந்த மேனியாக நின்றிருக்கிறான் ஒரு போட்டோவில். அந்த படத்தின் பின்னணியில் பாடகியின் போட்டோ சிரித்துக் கொண்டிருந்திருக்கிறது. 

இப்படியெல்லாமா மன  வக்கிரத்தை வெளிப்படுத்துவார்கள்.  

பாப்பா நொந்துபோய் பதிவு செய்திருக்கிறது.