த.வெ.க தொன்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ‘யாதும் அறியான்’ பட டிரைலர்!

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘யாதும் அறியான்’ இப்படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் கதாநாயகனாக நடிக்க,கதாநாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் ‘கேபிஒய்’ ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.சமீபத்தி
த.வெ.க தொன்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில்,தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து, படத்தின் நாயகன் தினேஷ் கூறுகையில், “மிகப்பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், சினிமாவை பொறுத்தவரை இயக்குநர் என்ன சொன்னாரோ அதை கேட்டு மட்டுமே நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக எனது பின்புலத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையாக உழைத்திருக்கிறேன்.
சுமார் 15 நாட்கள் கடியான தூக்கம் இல்லாமல், உழைத்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன், என்று இயக்குநர் முடிவு செய்தப் பிறகு இந்த படத்திற்காக எப்படி எல்லாம் உழைக்க முடியுமோ அப்படி உழைத்திருக்கிறேன்.படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்த விஜய் பற்றிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜயின் அரசியல் பிரச்சாத்திற்கான விளக்கம் போல் டிரைலர் அமைந்திருப்பதாகவும் பலர் சொல்கிறார்கள். ஆனால், முதலில் என் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் வேண்டுமா!, என்று நான் யோசித்தேன், தயங்கினேன். ஆனால், இயக்குநரின் கண்ணோட்டத்தை பொறுத்தவரை அந்த காட்சிகள் திரைக்கதையோடு பயணிப்பதால், ஒரு நடிகனாக அதை ஏற்றுக் கொண்டேன்.இப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், டிரைலர் மிகவும் நன்றாக இருக்கிறது, என்று சொன்னதோடு. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, என்று பல விசயங்களை பாராட்டி பேசியாது மகிழ்ச்சியாக உள்ளது ” என்கிறார்.இப்படத்துக்கு இசையமைப்பாளராக விகாஸ் பதீசா, ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். .