மிஸ்ஸஸ் & மிஸ்டர் (விமர்சனம்) ரிட்டயர்மென்ட் கிழவிகளின் ஆபாசம்!
வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தம்பதியினர். இவர்களில், வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ராபர்ட்க்கு உடன்பாடில்லை. இதன் காரணமாக இருவருக்குள்ளும் சண்டை உருவாகிறது. இப்படியான சூழலில், குழந்தை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து சூழ்நிலைகளையும் வனிதா உருவாக்குகிறார். அவரின் திட்டப்படி, வனிதா கர்ப்பமாகி விடுகிறார். இதை, ராபர்ட்டுக்கு தெரியாமல் இருப்பதற்காக, அவர் பாங்காக்கிலிருந்து இந்தியா வந்துவிடுகிறார். ராபர்ட், வனிதாவைத் தேடி இந்தியா வருகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே மிஸஸ் & மிஸ்டர்.
வனிதா விஜயகுமார், 40 வயதை கடந்த பெண்மணியாக அந்த கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தியிருக்கிறார். ராபர்ட்டை பலவந்தப்படுத்தி, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அவர் செய்யும் வேலைகள் அனைத்தும், அய்யே ரகமாக இருக்கிறது. வயதுக்கு மீறி கவர்ச்சி காட்டியிருப்பது சுத்தமாக எடுபடவில்லை!
தெலுங்கு பேசியபடி, வனிதாவின் அம்மாவாக நடித்திருக்கும் ஷகிலா வரும் காட்சிகள் எரிச்சலடைய வைக்கின்றன.
பவர் ஸ்டார் சீனிவாசன், ஃபாத்திமா பாபு, ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ், கணேஷ்குமார், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மற்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் கிரண் என பலர் நடித்திருந்தாலும், எந்தக்காட்சிகளும் எடுபடவில்லை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஓகே.
ஒளிப்பதிவாளர்கள் ராஜபாண்டி.டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டிஜி கபில் ஆகியோரது ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கிறது. பாங்காக் காட்சிகள் சிறப்பு.
40 வயதை கடந்த பெண்மணியாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கியிருக்கும் வனிதா விஜயகுமார், கவர்ச்சி காட்டுவதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, ரிட்டயர்மென்ட் ஆன கிழவிகளுக்கு பல்லு செட்டும், லிப்ஸ்டிக்கும் போட்டு, முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ – ரிட்டயர்மென்ட் கிழவிகளின் ஆபாசம்!