‘தேசிங்கு ராஜா 2’ – (விமர்சனம்) ‘கடி’ காமெடிகளின் அலங்கோலம்!

இன்ஃபினிட்டி கிரியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், எழில் எழுதி இயக்கியிருக்கும் படம், ‘தேசிங்கு ராஜா 2’. இதில் விமல், ஜனா, பூஜிதா ,புகழ்,ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் , லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, வையாபுரி உடப பலர் நடித்துள்ளனர். ஆர் செல்வா ஒளிப்பதிவு செய்திருக்க, வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
அருகருகேயான எல்லைக்குட்பட்ட, இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்களான விமல், புகழ் இருவருக்குமிடையே மாமூல் வாங்குவதில் கடும் போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் ஒரு ரிசார்ட்டில் கூத்தடிக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட இவர்களின் அஜால் குஜால் வீடியோ டிஸ்க் காணாமல் போகிறது. அந்த டிஸ்க்கை கண்டுபிடிக்க மந்திரி ரவிமரியா விமல், புகழ் இருவருக்கும் அழுத்தம் கொடுக்கிறார். அதே நேரத்தில் ஒரு பிரபலமான ரவுடி கொலை செய்யப்பட்டு முண்டமாக கிடக்கிறான். அவனது தலையைத் தேடும் பொறுப்பும் வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் தேசிங்கு ராஜா 2 .
படத்தில் நடித்த விமல், ஜனா, பூஜிதா ,புகழ்,ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் , லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, வையாபுரி ஆகிய அனைவரும் அவரவர் இஷ்டத்துக்கு நடித்திருப்பது போல் தெரிகிறது. எல்லோருமே பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள். ஆனால் எதையுமே ரசிக்க முடியவில்லை!
நாயகன் விமல், போலீஸ் இன்ஸ்பெக்டராக பெயரளவிற்கு நடித்திருக்கிறார். அவருக்கும் அவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் இல்லை.
புகழ், பெண் இன்ஸ்பெக்டராக அடித்திருக்கிறார். வழக்கமாக ஹை வால்யூமில் கதறியிருக்கிறார். காட்டுக் கத்தல்! படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள். எதையுமே ரசிக்க முடியவில்லை.
ஏராளமான நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு, ஸ்க்ரிப்ட்டே இல்லாமல் கும்மாளம் அடித்த மாதிரியாக இருக்கிறது. ஒரு காட்சிக்கூட ரசிக்கும்படி இல்லை.
இயக்குநர் எழிலுடன் சேர்ந்து, இசையமைப்பாளர் வித்யா சாகரும் ஏமாற்றியிருக்கிறார். மற்றபடி படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை!
தேசிங்கு ராஜா 2 – ‘கடி’ காமெடிகளின் அலங்கோலம்!