‘2023’ தேசிய திரைப்பட விருது: கமல்ஹாசன் எம்பி வாழ்த்து!
இந்திய அரசின் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழை பொறுத்தவை பார்க்கிங் திரைப்படம் மொத்தம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது. வாத்தி படத்துக்கு இசையமைத்தற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜிவி பிரகாஷ் பெற்றிருக்கிறார். அவருக்கு இது இரண்டாவது தேசிய விருது ஆகும்.இந்நிலையில் தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி தனது எக்ஸ் தலை பதிவில் பதிவிட்டுள்ளதாவது,”2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது.‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.
வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.