சஸ்பென்ஸ், திரில்லராக உருவான ‘போலீஸ் ஃபேமிலி’.!

‘ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ்’ பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. இதில்,பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன்  முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் படத்தயாரிப்பாளர் மலைசாமி ஏ எம் ராஜா நடித்துள்ளார். சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை  ‘பகை மிரள’ படத்தின் இயக்குனர்  பாலு இயக்கியுள்ளார்..இப்படம் குறித்து  தயாரிப்பாளர் மலைசாமி ஏ எம் ராஜா கூறும்போது, “இப்படத்தில் சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் எல்லாமே கலந்து இருக்கும். ஒரு காவல் நிலையத்தில் காவலர்கள் எப்படி பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு வரக்கூடிய சில எதிர்ப்புகள் பிரச்சனைகளால் அவர்களுடைய குடும்பம் எப்படி தொந்தரவுக்கு ஆளாகிறது, அதை எப்படி அவர்கள் சாதுரியமாக கையாண்டு வில்லனிடம் இருந்து மீண்டு வருகிறார்கள், அதில் என்ன இழப்பைச்  சந்திக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த போலீஸ் ஃபேமிலி படம் உருவாகி உள்ளது.இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ என்கிற தலைப்பு,  கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால்  அதுவாகவே கதையைத் தேடி வந்துவிட்டது.. படம் பார்க்கும்போது கதையில் அதற்கான நியாயம் இருப்பதை உணர முடியும். விரைவில் டிரைலர்  வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளோம்” என்கிறார்.