ரூ. 78.20 கோடியில் சொகுசு வீடு வாங்கிய க்ரித்தி சனோன்!
பாலிவுட் நடிகையான க்ரித்தி சனோன் மும்பையில் ஒரு புது வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மும்பை பாந்த்ராவில் மிகவும் ஆடம்பரமான பகுதியான ‘பாலி ஹில்’ பகுதியில் கடற்கரை அருகில் இருக்கும் டூப்ளக்ஸ் பென்ட்ஹவுஸ் வாங்கி இருக்கிறார்.இந்த ஆடம்பரமா ன பென்ட்ஹவுஸ்கள் பாந்த்ரா மேற்கின் உயர்மட்ட பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ளன. 14வது மற்றும் 15வது தளங்களில் பரந்து விரிந்துள்ள இந்த குடியிருப்பு, 6,636 சதுர அடி கம்பளப் பகுதியைக் கொண்டுள்ளது. கொள்முதல் விலை தோராயமாக 78.20 கோடி ரூபாய், அதாவது ஒரு சதுர அடிக்கு 1.18 லட்சம் ரூபாய் கொடுத்து அவர் அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்.
முன்னதாக வாடகை வீட்டில் வசித்து வந்த க்ரித்தி சனோன் அந்த வீட்டுக்கு மாதம் ரூ.10 லட்சம் வாடகை கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் பிரபல நட்சத்திரங்கள் ஆமிர் கான், சஞ்சய் தத் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் வசித்து வருகின்றனர். க்ரித்தி சனொன் தற்போது தனுஷ் ஜோடியாக ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.விரைவில் இப்படம் வெளியாக உள்ளது