பட நிறுவனம் தொடங்கிய ரவி மோகன்! கண்கலங்கிய கெனிஷா!!

நடிகர் ரவி மோகன் தற்போது ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி. இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது. விழாவை  ரவி மோகனின் தோழி கெனீஷா விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், மணிகண்டன், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு, நடிகைகள் ஜெனிலியா, ஸ்ரதா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், கௌரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரவி மோகனின் தாயார் வரலட்சுமி, அண்ணன் மோகன் ராஜா மற்றும் காதலி கெனிஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்’ இந்நிகழ்வில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க, ரவி மோகன் இயக்குனராக அறிமுகமாகும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ மற்றும் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘புரோ கோட் ‘ ஆகிய இரண்டு படங்களின் பூஜை மற்றும் தொடக்கவிழா நடந்தது. இந்நிகழ்வில் ரவிமோகன் பேசுகையில்,””வாழ்த்தணும் என நினைக்குறவங்க இங்கே வந்திருக்கீங்க, வாழ்த்துங்க. என்னை வாழ்த்த வேண்டாம் என நினைக்கும் சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் சொல்வது, நான் இங்கே தான் இருப்பேன். வேறு எங்கும் போக மாட்டேன். வளர்ந்துகொண்டே தான் இருப்பேன்.

எனக்கும் சில நெகட்டிவிட்டி வந்தது. என் சொத்துகள் முடக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் இல்லை. என் உண்மையான சொத்து இங்கு வந்திருப்பவர்கள்தான். காசு, பணம் சம்பாதிப்பதெல்லாம் சொத்து கிடையாது. இந்த அன்பைச் சம்பாதிப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றியாளன்..”ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் போது கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார். அது காசு, பொருள், வாகனம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மாதிரி கடவுள் கொடுத்த ஒரு கிஃப்ட் தான் எனக்கு கெனிஷா. நான் யார் என்பதை எனக்கே உணர வைத்தவர் அவர்தான். அவங்களை மாதிரி எல்லார் வாழ்க்கையிலும் ஒருத்தவங்க இருக்கணும்னு ஆசைப்படுறேன்” என்றார்நெகிழ்ச்சில் கண்கலங்கியபடியே. . ரவி மோகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கெனிஷாவும் கண்கலங்கினார்.இந்நிகழவில் சிவகார்த்திகேயன் பேசுகையில்,” தயாரிப்பாளராக இருந்தால் ஒரே விஷயம் நாம் எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருக்க வேண்டும். மேலும் ரவி சாரின் இந்த முயற்சியில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் உருவாகும். அவருடைய பேனரில் நானும் ஒரு திரைப்படம் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.“

இந்த நிகழ்ச்சியில் ஜெனிலியா ரவி மோகன் இருவரும் சேர்ந்து சந்தோஷ் சுப்ரமணியன் சீனை ரீ-கிரியேட் செய்ததைப் பார்த்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஜெனிலியா மேம். ரித்தேஷ் சார் ஐ லைக் சார். என்னை தவறாக நினைக்காதீர்கள்.நான் காலேஜ் படிக்கும் போது சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். அவர்களை இந்த மேடையில் பார்க்கும் போது ஒரு நாஸ்டாலஜிக்காக இருந்தது. ஜெனிலியா ரவி மோகன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும்.”என கூறினார்
ரவி மோகன் நடிப்பில் தற்போது ஜீனி திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்கிறார். டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் கராத்தே பாபு திரைப்படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவும் இருந்து வருகிறது .