எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் இயக்கத்தில் உருவாகும் ‘மலையப்பன்’ !
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சந்திரன், இயக்குநராகவும், நாயகனாகவும் அறிமுகமாகும் ‘மலையப்பன்’ கதையை இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷிடம் சொன்ன போது, கதையை கேட்டவர் உடனடியாக ஐந்து மெட்டுக்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார். ஐந்து மெட்டுக்களும் ஒவ்வொரு வகையில், ஈர்க்கும் வகையில் இருக்கிறது, என்று கூறி சுவாமிநாதன் ராஜேஷை பாராட்டிய இயக்குநரும், நடிகருமான குரு சந்திரன், இனி தான் எத்தனை படங்கள் எடுத்தாலும், நீங்கள் தான் இசையமைப்பாளர், என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய ‘மலையப்பன்’ படத்தின் படப்பிடிப்பு, இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் இசையமைப்பில் உருவான பாடல் காட்சியோடு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று தொடங்கியது.
ஹீரோ குருச்சந்திரன் நடித்த முதல் பாடல்காட்சியை இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழி ஆக்சன் சொல்ல, படமாக்கப்பட்ட முதல் பாடல் காட்சியிலேயே சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கைத்தட்டல்களையும் பாராட்டுக்களையும் பெற்றார் ஹீரோ குருச்சந்திரன்.
சுவாமிநாதன் இராஜேஷ் இசையமைக்க, மூதுரை பொய்யாமொழி இணை இயக்கம் செய்ய, மாஸ்டர் இராம்தாஸ் முருகன் நடனம் அமைக்க சிறப்பாக பாடல் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
விழாவில் எழுமலை திருவள்ளுவர் கல்லூரி தலைவர் பெருமாள், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.ஆர்.பாண்டியன், ஊரின் முக்கிய பிரபல தொழிலதிபர், ஊர் பொதுமக்கள் மற்றும் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் , இணைத் தயாரிப்பாளர்கள் திருப்பூர் செ. செல்வம், கணேஷ் ஸ்டுடியோ கோபி, சா. சுப்பையா ஆகியோர் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர்.
படப்பிடிப்பு தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இதுவரை கேமராவின் கால்கள் படாத பல்வேறு கிராமங்களில் நடைபெற உள்ளது. மேலும், ’திருப்பாச்சி’ பட இயக்குர் பேரரசு, ’திருடா திருடி’ பட இயக்குநர் சுப்ரமணிய சிவா,
’சிட்டிசன்’ பட இயக்குநர் ஷரவண சுப்பையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட பாடல்கள் மற்றும் சுயாதீன பாடல்கள் என இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் பாடல்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருவதால், அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. குறிப்பாக கதை கேட்கும் போதே, அதற்கான பாடல்கள் எப்படி இருந்தால் மக்களிடம் சென்றடையும் என்பதை கணித்து விடும் சுவாமிநாதன் ராஜேஷ், உடனடியாக மெட்டு போட்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களை வியக்க வைத்து விடுகிறாராம்.
காதல்மதி வரியில் “வேஷங்கட்டிக்கிட்டு…” என்ற பாடலை பிரசன்னா குரலில், தனது இசையில் வீரமிக்க பாடலாக பதிவு செய்து கொடுத்திருக்கிறார். பாடலை கேட்ட பட குழுவினர் இசையமைப்பாளரை கைகுலுக்கி கைதட்டி பாராட்டியதோடு, படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிப்பதற்கு தங்களது விரைவான பணி உதவியாக இருக்கும், என்று தெரிவித்துள்ளனர். மேலும், ‘மலையப்பன்’ படத்தின் பாடல் ஒன்றை பிரபல இசையமைப்பாளuரை பாட வைக்கும் முயற்சியில் சுவாமிநாதன் ராஜேஷ் ஈடுபட்டுள்ளார்.