மயிலையில் மாங்குயில் திரிஷா ; த.வெ.க. வேட்பாளர்!!

 

தேர்தல் நெருங்கும்போது சுவையான செய்திகளும் வரும்.சோதனையான யூகங்களும் தலை காட்டும்.

மயிலையில் திரிஷா ,சேதியா ,யூகமா?

இரண்டுக்குமே வாய்ப்புகள் இருக்கிறது. ஆக புறந்தள்ள முடியாது,அதிகாரபூர்வமாக விஜய் அல்லது திரிஷா வாய் திறக்க வேண்டும். 

அண்மையில் ‘சைமா’ திரைத் திருவிழாவுக்கு சென்றிருந்த திரிஷா விஜய்க்கும் தனக்குமான நட்பின் அடிப்படையில் அரசியல் ரீதியான கருத்துகளை சொல்லியிருந்தார். 

“அவருக்கு தகுதி இருக்கிறது, முதல்வர் ஆவதற்கு!”

அடுத்து அவர் சொன்ன கருத்துகள் எல்லாமே விஜய்யின் கொள்கை பரப்பு செயலாளர் ரேஞ்சுக்கு சொன்னவையாகவே இருந்தது.

தற்போது திரிஷாவின் இடது பக்க தோளின் பின் பகுதியில் திரைப்படம் எடுக்கும் கேமரா வித் ஸ்டாண்டுடன் டாட்டு புதிதாக காணப்படுகிறது.அவரே வெளியிட்டிருந்தார்,

அவர் நடிகை. அதனால் திரைத் துறை தொடர்பான கருவிகளை பச்சையாக குத்திக் கொள்வதற்கு யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை. ஆனால் ஆலோசிக்காமல் எதையும் அவர் செய்ய மாட்டார். இவரது வெல் விஷராக  இருப்பவர் த.வெ.க.தலைவர் விஜய் .இவர்கள் இருவரையும் இணைத்து எத்தனையோ செய்திகள் ,ஸ்டில்ஸ் வெளிவந்திருந்தாலும் அதை அவர்கள் மறுத்ததில்லை. ஆகவே இந்த கேமரா வித் ஸ்டாண்ட் பச்சை தலைவரின் அனுமதியுடன்தான் அல்லது தெரிந்துதான் குத்தப்பட்டிருக்கிறது. அனுமானிப்பது தவறில்லை. கேமரா யார்? ஸ்டாண்ட்யார் என்கிற விவாதம் எழ வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே தனக்கு நெருக்கமான திரிஷாவை மயிலைத் தொகுதி வேட்பாளராக நிறுத்த அவர் திட்டமிட்டிருக்கலாம். 

மக்கள் நீதி மையத்துக்கு இந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது.ஸ்ரீபிரியா கணிசமான வாக்குகளை வாங்கியிருந்தார். இதனால் விஜய் தனது வேட்பாளராக இறக்குவதற்கு வாய்ப்பு அதிகம்.

––தேவிமணி