ரவி மோகன் வெளியிட்ட ‘ஆன் ஆடினரி மேன்’ பட ப்ரோமோ வீடியோ !
நடிகர் ரவி மோகன் கடந்த மாதம் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பும் வெளியானது. அந்நிகழ்வில் நடிகர் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 
அந்த அறிவிப்பில் ஓன்று தான் அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து ரவி மோகன் முதன்முறையாக இயக்கவிருக்கும் ,’ஆன் ஆடினரி மேன்’ (‘ஒரு சாதாரண மனிதன்’) .
இந்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் ரவி மோகன் இயக்கவிருக்கும்,’ஆன் ஆடினரி மேன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ அவரது பிறந்த நாளில் வெளியாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை சேர்த்துள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெய் சாரோலா கவனிக்க, ஹைட்ரோ இசை அமைத்து வருகிறார்.க்கிறார். இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப குழுவின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறது படக்குழு