நடிகர் ரோபோ சங்கர் காலமானார்! கமல் இரங்கல்!!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர்.வயது 46 கடந்த 2007 ஆம் ஆண்டு ரவிமோகன் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் முலம் திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தையும் தக்க வைத்து கொண்டார்
இந்நிலையில், ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு நீர் சத்து குறைபாடு, ரத்த அழுத்தம் குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.
. ரோபோ சங்கர் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அவரது மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர் அவரது இறுதி சடங்கு நாளை சென்னையில் நடக்கிறது ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.ரோபோ சங்கர் மறைவுக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது, “”ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.” என ரோபோ சங்கர் குறித்து கமல்ஹாசன் உருக்கமான பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருந்தவர் ரோபோ சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.