கொடைக்கானலில் நடந்த அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவமே *வட்டக்கானல்*!

கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்து வருகிறது. இக்கால இளைஞர்களை அழிவில் இருந்து காப்பாற்றக்கூடிய முக்கிய விஷயங்களை சொல்லியிருக்கும் படம்.. விழிப்புணர்வு என்ற பெயரில் அறிவுறுத்தாமல் ய தார்த்த நிகழ்வுகளை கொண்டு சொல்லியிருக்கிறோம்
இயக்குனர் பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகனாக: துருவன் மனோ (பிரபல பின்னணி பாடகர் மனோ அவர்களின் மகன்)கதாநாயகியாக: மீனாட்சி கோவிந்தராஜ் நடித்துள்ளனர்..மேலும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில்
R K சுரேஷ், பாடகர் மனோஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்..துணை கதாபாத்திரங்களில் முருகானந்தம், Vijay TV சரத், *R K வரதராஜ்*, ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த்,பாத்திமா பாபு ஆகியோறும் நடித்துள்ளனர்…
இந்த திரைபடத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Dr. A. மதியழகன் மற்றும் R.M. ராஜேஷ் இணைந்து தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.