விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பில் டி.ராஜேந்தர் !

மதகஜ ராஜா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விஷால் தனது  35வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  ஆர்பி சவுத்ரியின்  சூப்பர் குட்பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  இப்படத்தின்  படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்தது வருகிறது.இப்படத்துக்காக  சென்னையில் டி .ஆர். கார்டனில் பல கோடி செலவில்  மிக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பாராயன் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இணைந்து வித்தியாசமான முறையில் நடனங்கள் கலந்த சண்டை காட்சிகளை  ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் படமாக்கி வருகின்றனர் இந்நிலையில்,தனது படங்களில் வியக்க வைக்கும் பிரமாண்ட அரங்குகளை அமைத்து பாடல் காட்சிகளை படமாக்குவதில் பெயர்போன நடிகர் இயக்குனர் டி ராஜேந்தர், இந்த பிரமாண்ட அரங்கத்திற்கு  வந்து பார்வையிட்டு, வியந்து, நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன்-விஷால் கூட்டணியில் உருவாகி  பெரும் வரவேற்பை பெற்ற  மார்க் ஆண்டனி திரைப்படமும் அதே இடத்தில்  பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.