விவசாயிகளின் நலன் பற்றி பேசும் “புத்தம் புது நேரம்”. !
சக்தி பீடம் ப்ரொடக்ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “புத்தம் புது நேரம்”. கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.இந்த நிகழ்வினில் இயக்குனர் சந்திரகுமார் பேசும்போது, “35 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். பிளாக் & ஒயிட் சினிமாவில் இருந்து கலர், தற்போது டிஜிட்டல் சினிமா வரை வந்து நிற்பது மகிழ்ச்சி. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கிளப் ஹவுஸில் பேசும்போது சினிமா பற்றி நிறைய பேசினோம். ஆன்லைனில் பலருக்கு இலவசமாக சினிமா பற்றி கிளாஸ் எடுத்தேன். அப்போது எங்களுக்கு ஒர்க் ஷாப் வைத்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள். ஆனால் ஒர்க் ஷாப் நடத்துவதை விட 15, 20 நாட்களில் ஒரு சினிமாவாக எடுப்போம் என பேசினோம். அப்படி ஒரு படத்தையும் எடுத்தோம், ஆனால் அதை திரையரங்கில் ரிலீஸ் செய்யவில்லை. அதனால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒரு படம் எடுக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட படம் தான் இந்த புத்தம் புது நேரம். இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் என யாரும் இல்லை, எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இந்த படத்தின் மூலம் லட்சங்கள், கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இந்த படத்துக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
Related Posts
இசையமைப்பாளர் கே.பரஞ்சோதி பேசும்போது, “பாலக்காடு அருகில் உள்ள கொல்லங்கோட்டில் சந்திரகுமார் சார் குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல பழக்கம். அங்குள்ள கோவிலில் நான் பாடுவதை சார் கேட்டிருக்கிறார். அப்போதே என்னை நன்றாக வருவார் என சொன்னார். இசைஞானி இளையராஜா சார் என் மானசீக குரு. அவர் சொன்ன விஷயங்களை நான் இசையமைக்கும்போது இன்றும் பின்பற்றுகிறேன். சந்திரகுமார் சார் நன்றாக ட்யூன்ஸ் கேட்டு வாங்குவார். 1988ல் அவர் படத்துக்கு இசையமைத்தபோது என் இசையை கேட்டு விட்டு படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார் துபாயில் இருந்து எனக்கு ஒரு கீபோர்ட் வாங்கி அன்பளிப்பாக தந்தார். இப்போது என்னுடைய 70வது வயதில் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறேன். என் பிறந்த நாளன்று இந்த இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குனர் சந்திரகுமார் சார். அவருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.