கார் விபத்தில் சிக்கிய ‘பாகுபலி’ நடிகை !

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வெளியான பாகுபலி படத்தில் “மனோஹரி” பாடலுக்கு பிரபாஸ் உடன் கலக்கலாக நடனமாடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் பிரபல பாலிவுட் நடிகையான நோரா ஃபதேஹி ,.தற்போது தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நோரா சன்பர்ன் இசை விழாவில் கலந்து கொள்வதற்காக, ஃபதேஹி மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதி அருகே அம்போலியில் உள்ள லிங்க் சாலையில்காரில் சென்று கொண்டிருந்த போது, நோராவின் கார் மீது,வினய் சாக்பால் என்பவரின் கார் வேகமாக மோதி விபத்தில் சிக்கினார். இதில் அவர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வினய் சாக்பால் . விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து , போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து இந்த விபத்து குறித்து நடிகை நோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,”நண்பர்களே, நான் நலமாக இருக்கிறேன். நான் பெரிய கார் விபத்தில் சிக்கியிருந்தேன். குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற ஒருவர் எனது கார் மீது மோதிவிட்டார்.. நான் உயிருடன் இருக்கிறேன். சில சிறிய காயங்கள் உள்ளன. தயவு செய்து குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.