தணிக்கை குழுவின் பிடியில் சிக்கிய ஜனநாயகன் !
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று மலேசியாவில் நடந்து முடிந்தது.இந்நிலையில் இப்படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறை காட்சிகள் இருந்ததால், தணிக்கை குழு கிட்டத்தட்ட 64 காட்சிகளில் (வசன காட்சிகள் உள்பட) கத்தரி போட்டு தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இப்படக்குழு தணிக்கை குழுவினரிடம் இத்தனை காட்சிகளில் கத்தரி போட்டுள்ளதால் ‘யு ‘ சான்றிதழ் வழங்குமாறு வைத்த கோரிக்கையை நிராகரித்து படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்கிறார்கள். இந்நிலையில் விஜய் நேரடியாக சம்பந்தப் பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசை நேரடியாக தாக்கும் வசனக்காட்சிகளில் கை வைத்தாலும் பரவாயில்லை மாநில அரசை வசைபாடும் காட்சிகளில் கை வைக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.