இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.இதனால் பெரும் மனவேதனையில் இருந்து வந்த இயக்குனர் பாரதிராஜா, மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில்,மலேசியாவில் தனது மகள் வீட்டில் இருந்த பாரதி ராஜா, கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில், தற்போதுஉடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.