‘டாக்ஸிக்’ நயன்தாராவின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது!
நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து, கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் வெளியாகிரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தது. இந்நிலையில், தற்போது நயன்தராவின் , ‘கங்கா’ கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ பின்னணியில் நின்று கொண்டு, அந்த இடத்தையே கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் காட்டும் விதமாக அழகும் ஆபத்தும் கலந்த நயன்தாராவின் தோற்றம், அவரின் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் மர்மத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி மேற்கொள்ள, இசையமைப்பை ரவி பஸ்ரூர் செய்துள்ளார்.