உச்ச நீதி மன்றத்தை நாடிய ‘ஜனநாயகன்’ படக்குழு !
ஜனநாயகன் பட விவகாரத்தில், தணிக்கை குழுவினரிடம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவுக்கு , தணிக்கை குழுவின் மேல் முறையீடு காரணமாக தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து இவ்வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்து, ‘ஜனநாயகன்’ பட விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN ப்ரொடக்ஷன்ஸ் படக்குழு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை வரும் திங்கட்கிழமை அன்று அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிடப்பட்டுள்ளது.