நீதிபதியின் அதிரடி உத்தரவுக்கு பின்பும் ‘ஜனநாயகன்’ படத்துக்கு மீண்டும் சிக்கல்!
.நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைபதில் சிக்கல் எழுந்ததால், படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. .இந்த வழக்கின் விசாரணை நேற்று முன் தினம் (07-01-26) வந்தது. அப்போது, படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் சார்பில் வாதிடப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, வழக்கின் தீர்ப்பு இன்று (09-01-25) வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் நீதிபதி ஆஷா இன்று (09-01-25) தீர்ப்பளித்தார். அதில் ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவையும் ரத்து செய்தார். இதையடுத்து விஜய்யின் ஜன நாயகன் படம் விரைவில் திரைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்ததால் ஜன நாயகன் படத்துக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.