‘ஜன நாயகன்’ : ‘உச்ச நீதிமன்றம்’ அதிரடி உத்தரவு! படக்குழு அதிர்ச்சி!!
‘ஜன நாயகன்’ பட தணிக்கை சான்றிதழ் குறித்த விவகாரத்தில் தயாரிப்பு தரப்பு தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் , இது குறித்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என்றும்,. சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்விலேயே படத் தரப்பின் வாதத்தை முன்வைக்க அறிவுறுத்தியதோடு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
இது குறித்த விபரம் வருமாறு, நடிகர் மற்றும் தவெக கட்சியின் தலைவருமான விஜயின் கடைசிப்படமான ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகனுக்குஉடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய தனிக்கைக்குழு , தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் வழங்காமல் தனிநீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் எனக் கூறி, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவை மேல் முறையிட்டு வழக்கு தொடுத்து ரத்து செய்தது.
இதனால், திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியீடு செய்யமுடியாத நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதேசமயம் தணிக்கை வாரியம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தது.. அதில்,’ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் வழக்கில் எங்களின் வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜனநாயகன் பட மேல்முறையீட்டு வழக்கு , இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி. ‘ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிட முடிவு செய்திருந்தோம். இதையொட்டி வெளியீட்டு தேதியை அறிவித்திருந்தோம். எனவே விரைந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , “படத்தின் வெளியீட்டு தேதியை குறிப்பிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்க முடியுமா? இது தணிக்கை வாரிய உறுப்பினர்களை அழுத்தத்திற்கு ஆளாக்காதா? இதேபோல் நீதிபதிகள் குறிப்பிட்ட தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று முறையிடலாமா?, இன்னும் சில நாட்களில் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இது குறித்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என்றும்,. சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்விலேயே படத் தரப்பின் வாதத்தை முன்வைக்க அறிவுறுத்தியதோடு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஜன நாயகன் தொடர்பான வழக்கை வரும் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்