கமல்- ரஜினி இணையும் புதிய பட வீடியோ வெளியானது !
ஜெயிலர் 2′ படத்தை தொடர்நது நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தயாரிப்பில்,சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக உள்ள இப்படம் 2017-ல் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், தமிழ்த்திரையுலகில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்து கிட்டத்தட்ட 40 வருடங்களை கடந்து விட்ட நிலையில்,தற்போது இருவரும் மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கடந்த சில வருடங்களாவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
முதலில் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜின் கதையை கேட்ட ரஜினி கமல் இருவரும்,தங்களுக்கு ஆக்ஷன் கதையைவிடவும், லைட் ஹார்ட்டடாக; காமெடி எல்லாம் இருக்கும்படியான ஒரு கதை தான் வேண்டுமென கூறி விட்டதால் லோகேஷ் கனகராஜுக்கு அப்பட வாய்ப்பு கை நழுவியது.இதற்கிடையே இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சொன்ன கதை இருவருக்கும் பிடித்த்து போனதால் ரஜினி கமல் இருவரையும் இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. சமீபத்தில் அப் படத்தின் ப்ரோமோ ஷூட் சென்னையில் 2 நாட்கள் நடந்தது; அதில் இரண்டு பேரும் 80ஸ் கெட்டப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், “உலகங்கள் ஒன்றிணையும்போது ஒரு பக்கம் சாய்வதேது?” என ரஜினி,கமல் படம் குறித்து பதிவிட்டு இருந்தது. நேற்று வெளியிட்ட இரண்டாவது போஸ்டரில்,ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வீடியோ இன்று பகல் 12:07 மணிக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில், ராஜிவ் மேனன் ஒளிப்பதிவில்,அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 3 நிமிடங்கள் 46 நொடிகள் ஓடும் இந்த ப்ரோமோவில் தொடக்கத்தில்,நெல்சன் திலீப்குமாரும், அனிருத்தும் வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து ரஜினியும், கமலும் ஒரு அறையில் தங்களுக்கான உடைகள், கூலிங் கிளாஸ், வாட்ச், ஷூ உள்ளிட்டவைகளை தேர்தெடுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பிரமாண்ட கார் செட் ஒன்றில் நுழையும் இருவரும் நடந்து வரும்போது; கார் சாவியை ரஜினி தனக்கே உரிய ஸ்டைலாக கமலிடம் தூக்கி போட அதை லாவகமாக பிடித்து விரல்களில் சுழற்றிய படியே கார் கதவை திறந்து இரண்டு பேரும் கெத்தாக காரில் ஏறி அமர்கிறார்கள்.
அப்போது பின்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த அனிருத்தும், நெல்சனும்,ரஜினி,கமல் இருவரிடமும், சார்ஸ் ..ஒரு பீத்தோவனும் ,பப்பிலஹரியும் மிக்ஸ் பண்ணுன மாதிரி ஒரு தீம் மியூசிக் ரெடியா இருக்கு கேட்போமா? என கேட்க. அதற்கு கமல்,அதெல்லாம் அப்புறம் கேட்கலாம் அதுக்கு முன்னாடி,ஒன்னு கேக்கணும்,இதுல யார் ஹீரோ? என கமல் கேட்கிறார். அருகில் அமர்ந்திருந்த ரஜினியும், கேட்குறாங்கள சொல்லுங்க ஜி… என கேட்க… கமல்ஹாசன் காரை ஸ்டார்ட் செய்து சீறிப்பாயும் காட்சியுடன் புரமோ முடிவடைகிறது . இந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.