ராதிகாவுக்கு முத்தம் கொடுத்து ‘கேக்’ ஊட்டிய நயன்தாரா!

தமிழ்த்திரையுலகில் நடிகை ராதிகா சரத்குமார் கடந்த 1978ம் ஆண்டில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின்மூலம் தன்னுடைய சாம்ராஜ்யத்தை தொடங்கி,தொடர்ந்து தன்னுடைய வித்தியாசமான, மாறுபட்ட, ஆளுமை மற்றும் அழுத்தமான நடிப்பால் தனக்கென தனி பாணியை கடைபிடித்து பல் வெற்றிப் படங்களை கொடுத்து,கலைஞரால் ‘கலையரசி’ என பட்டம் பெற்ற ராதிகாசரத்குமார், தற்போது 49 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில்,சமீபத்தில் வெளியான ‘தாய்க்கிழவி’ திரைப்படம் அவரது திரையுலக பயணத்திற்கு மகுடமாய் அமைந்துள்ளது.விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும்பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், ராதிகாவுக்கு கண்டிப்பாக தேசிய விருதை பெற்றுத்தரும் என பலரும் கூறி வருகின்றனர்.இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவுடன் ‘விஸ்வநாத்&சன்ஸ்’, நயன்தாராவுடன் ‘ஹாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரைத்துறைக்கு வந்து 49 வருடங்களை நிறைவு செய்யும் அவருக்கு ‘ஹாய்’ படக்குழுவினர் நடத்திய நிகழ்வில், நடிகை நயன்தாரா, ராதிகாவுக்கு கேக் ஊட்டிவிட்டதோடு அவர்க்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார். மேலும் நடிகர்கள் பாக்யராஜ் , கவின் உள்ளிட்டோரும் வாழ்த்தினர் .இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த நிகழ்வின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, சுற்றியுள்ள மனிதர்களின் அன்பே உண்மையான வெற்றி ராதிகா சரத்குமார் பதிவு..செய்துள்ளார்.