Wednesday, April 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஜன நாயகன்” முழு படமும் இணையத்தில் கசிந்தது! படக்குழுவினர் கடும் அதிர்ச்சி!!

admin by admin
April 10, 2026
in News
420 5
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடித்த  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

துஷாரா விஜயன் – அதிதி பாலன் நடித்த ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸ் மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது!

கடந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை.நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ஜனநாயகன் படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.இந்நிலையில் விஜய்யின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்து, வேகமாக பரவி வருகிறது. அதேபோல், ஜனநாயகனின் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சிகளும், படத்தின் அறிமுக காட்சியும் எனதுண்டு துண்டாக  பல நிமிட  நிமிட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. இது  படத் தயாரிப்பு தரப்பையும், படக்குழுவினரையும் பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.இந்நிலையில் ஜனநாயகன்  படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது,‘ஜன நாயகன்’ படத்தை யாரும் பகிர வேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினருலும் படக்குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் . சட்டவிரோதமாக இணையதளத்தில் ஜனநாயகன்  பட காட்சிகள் வெளியான நிலையில், இதனை யார் வெளியிட்டிருப்பார்கள் என்பது தொடர்பாக ‘நிசப்தம்’பட  இயக்குநர் மைக்கேல் அருண் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகன் பட காட்சிகளை லீக் செய்தவர் யாராக இருந்தாலும், அவர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். நிச்சயமாக இது தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அல்ல. நிச்சயமாக இது தணிக்கை குழுவிடம்  வழங்கப்பட்ட பிரதி கிடையாது. ‘எடிட் ரெபரன்ஸ்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இது படக்குழுவில் உள்ள மிக முக்கியமான நபர்களின் தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகும்.எனினும் அடுத்த மீட்டிங்கில், ஜனநாயகன் படத்தின் காட்சிகளை அவர்கள் கசியவிட்டுவிட்டார்கள்… அதை யார் செய்திருப்பார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று விஜய் கூறுவார். உண்மையில், கடைசி வரை அதைச் செய்தது யார் என்பது யாருக்குமே தெரியப்போவதில்லை. ஏனெனில், இந்த ‘எடிட் ரெபரென்ஸ்’  நகலை அணுகும் அதிகாரம் படத்தின் எடிட்டரை தவிர்த்து தவிர்த்து, படத்தின் கதாநாயகன் , தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மட்டுமே உண்டு.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.திரைப்படத் துறையின் தொழில்நுட்ப முறைப்படி, ஒரு படத்தின் ஆரம்பக்கட்ட எடிட்டிங் பணிகளின் போது மட்டுமே இத்தகைய எடிட் மார்க்குகள் கொண்ட பதிப்புகள் (ரா கட் ) பயன்படுத்தப்படும்.இத்தகைய பதிப்புகள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுபவை. குறிப்பாக, படத்தின் இயக்குநர், கதாநாயகன், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இந்த நான்கு முக்கிய நபர்களிடம் அல்லது அவர்களின் நேரடி மேற்பார்வையில் உள்ள எடிட்டிங் ஸ்டுடியோக்களில் மட்டுமே இந்தப் பிரதி இருக்கும். தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் பதிப்பு, இந்த நான்கு தரப்பில் ஏதேனும் ஒன்றிலிருந்து தான் கசிந்திருக்க வேண்டும் எனத் திரையுலகினர் உறுதியாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளத்தளங்களில் சட்டவிரோதமாக பகிரப்படும்  ஜனநாயகன்  படத்தை பதிவிறக்கம் செய்யவோ பகிரவோ வேண்டாம் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது இதற்கிடையே தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகன் திரைப்படத்தின் அறிமுகக் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி உள்ளிட்ட பல காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இப்போது முழுத் திரைப்படமும் லீக் செய்யப்பட்டிருப்பதாக பலர் ட்வீட் செய்து வருகின்றனர். இது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், இது கண்டிக்கத்தக்கது மற்றும் அநியாயமானது. கேவிஎன் நிறுவனம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி லட்சக்கணக்கான மக்கள் படத்தைப் பார்ப்பதற்கு முன்பும் இது போன்ற அனைத்து லிங்குகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்படத்தைச் சுற்றி இதுபோன்ற ஆபத்துகள் இருப்பதால், சினிமா வியாபாரம் மிகவும் ஆபத்தானதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருகிறது. விஜய்யின் கடைசிப் படத்தை இன்னும் எவ்வளவு தான் குறிவைப்பீர்கள்???” என்று பதிவிட்டுள்ளார்.

admin

admin

Related Posts

சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!
News

சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!

by admin
April 28, 2026
காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடித்த  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
News

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடித்த  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

by admin
April 27, 2026
துஷாரா விஜயன் – அதிதி பாலன் நடித்த ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸ் மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது!
News

துஷாரா விஜயன் – அதிதி பாலன் நடித்த ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸ் மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது!

by admin
April 27, 2026
திபு நினன் தாமஸ் இசையில், ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!
News

திபு நினன் தாமஸ் இசையில், ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

by admin
April 27, 2026
மே 2ல் ஸ்டிரைக்: நடிகர் சங்கத்துக்கு  எச்சரிக்கை!  அதிரடியில் இறங்கிய  தயாரிப்பாளர் சங்கம் !!
News

மே 2ல் ஸ்டிரைக்: நடிகர் சங்கத்துக்கு எச்சரிக்கை! அதிரடியில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம் !!

by admin
April 26, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?