கோவை, கேபிள் டிவியில் ஜனநாயகன்! ஆபரேட்டருக்கு போலீசார் வலைவீச்சு!

 

தவெக தலைவர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவது தொடர்ந்து தாமதம் ஆகி வந்த நிலையில்,, இப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து படம் வெளியான சமூக வலைதளம் மற்றும் டெலிகிராம் சேனல்கள் உள்ளிட்டவற்றை சைபர் கிரமை் போலீசார் முடக்கியதோடு, இவ்விவகாரம் தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் கோவையில் இன்று சட்டவிரோதமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக உள்ளூர் கேபிள் டிவி சேனல் அலுவலகத்துக்கு சென்ற போலீசார், அங்கிருந்த நான்கு ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர். கேபிள் டிவி ஆபரேட்டர் பழனிசாமி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தப்பி ஓடிய அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.