Friday, May 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

admin by admin
May 29, 2026
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதைஷார்ட்ஸ்

சென்னை, மே 29, 2026: வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் – ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

You might also like

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும், ‘ரீமேட்ச்’ !

விஜய் மகன் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ !

‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதைஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.  

உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.சென்னை லீலா பேலஸில் நடந்த  இந்த விழாவில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். அஜித் மற்றும் ஷாலினியின் மகள் அனோஷ்கா கல்லூரி படிப்பை முடித்த நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு கரண் தயாநிதி மாறன் நடத்திய கதை ஷார்ட்ஸ் ஆப் அறிமுக விழாவில் பங்கேற்றார்.

 கதைஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.
கதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.

கதைஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், “சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்தார்.

பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதைஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ-டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.

2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதைஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதைசொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.

admin

admin

Related Posts

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும்,  ‘ரீமேட்ச்’ !
News

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும், ‘ரீமேட்ச்’ !

by admin
May 29, 2026
விஜய் மகன் இயக்கத்தில் உருவான  ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!
News

விஜய் மகன் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

by admin
May 29, 2026
ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’  !
News

ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ !

by admin
May 28, 2026
மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!
News

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

by admin
May 28, 2026
வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள ” ஆல் பாஸ் “!
News

வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள ” ஆல் பாஸ் “!

by admin
May 27, 2026

Recent News

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும்,  ‘ரீமேட்ச்’ !

‘கேபிஒய் பாலா’ கதாநாயகனாக நடிக்கும், ‘ரீமேட்ச்’ !

May 29, 2026
விஜய் மகன் இயக்கத்தில் உருவான  ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

விஜய் மகன் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ ! ஜூலை 31ல் வெளியாகிறது!!

May 29, 2026
ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’  !

ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ !

May 28, 2026
மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

May 28, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?