Saturday, May 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

admin by admin
May 30, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது மோட்டார் சைக்கிள்,கார் ரேஸ்,  என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்- தாய் மோகினி. இவர்கள் சென்னை பாலவாக்கத்தில் தனியாக வசித்து வந்தனர்.இந்நிலையில்,நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி (வயது 89) கடந்த சில நாட்களாக  வயது மூப்பு  மற்றும் உடல்நலக்குறைவு  காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று  அதிகாலை காலமானார், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கார்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ள நடிகர் அஜித் துபாயில் இருந்து  உடனடியாக சென்னை  திரும்புகிறார்,  நாளை சென்னை  ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவுரது  தாயார் மோகினி தேவியின் இறுதி சடங்கு நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

  கடந்த 2020ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை சுப்பிரமணி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்த அஜித்தின் குடும்பத்தினர் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.இந்நிலையில்  அஜித்தின் தாயார் மோகினிமணி  உயிரிழந்துள்ளது அஜித்தின் குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அஜித்குமாரின்  தாயார் மறைவுக்கு,தமிழக முதல்வர் விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது,”அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்..இவ்வாறு அவர் கூறியுள்ளார் ..
திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைதள  பக்கத்தில்  இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அன்புச் சகோதரர் . அஜித்குமாரின் ன் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும்  அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமாருக்கும்  அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,”திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகரும், கார்பந்தய வீரருமான சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் பாசமிகு தாயாரை இழந்து வாழும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த மோகினிமணியின்  ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்  மக்கள் நீதி மய்யக்க்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “சகோதரர் . அஜித்குமாரின் தாயார் திருமதி. மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாமக தலைவர் அன்புமணி,புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும்,கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

You might also like

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

மோகினி மணி மறைவு குறித்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் அனுப் குமார், அணில் குமார் இணைந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”எங்கள் தாயார் மோகினி மணி (வயது 89) ., உடல்நலம் குன்றி வந்த நிலையில், இன்று அதிகாலை உறக்கத்திலேயே காலமானார். கடந்த சில ஆண்டுகளாகப் பல மருத்துவ நிபுணர்கள் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வழங்கிய கவனிப்புக்கும் ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.இந்தத் துயரமான நேரத்திலும், அவர் நீண்ட காலம் வாழ்ந்தார் என்பதும், அன்புக்குரியவர்களின் அழியாத அன்பையும் அரவணைப்பையும், அவருடைய கனிவான குணம், தன்னலமற்ற உள்ளம் மற்றும் அமைதியான நளினம் ஆகியவற்றை அறிந்த அனைவரின் உண்மையான மரியாதையையும் பெற்ற அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார் என்பதும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.பிரிவினையின் போது, புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்குச் சிறு வயதிலேயே குடிபெயர்ந்த சிந்தி மக்களின் அலைகளில் ஒருவராக, அனைத்தையும் விட்டுவிட்டுப் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தன் பிள்ளைகள் வாழ்வில் முன்னேறுவதைக் கண்டு அளவற்ற மனநிறைவையும் பெருமையையும் அடைந்தார்.உண்மையில், எங்கள் வாழ்வில் நாங்கள் சாதித்த அனைத்திற்கும், எங்கள் இல்லத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் விளங்கிய அவருடைய அன்பான அரவணைப்பு, அசைக்க முடியாத பக்தி மற்றும் ஞானமான ஆலோசனைகளே பெருமளவில் காரணமாகும்.எங்கள் மறைந்த தந்தையுடன் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் நீடித்த ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கையை வாழும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. அவர்களுடைய பொக்கிஷமான நினைவுகள் எங்களுக்குத் தொடர்ந்து வலிமையையும் ஆறுதலையும் அளிக்கும்.
வந்துகொண்டிருக்கும் அன்பான, மனமார்ந்த செய்திகள், இரங்கல்கள் மற்றும் நினைவுகளால் நாங்கள் நெகிழ்ந்துள்ளோம். எங்களால் தொலைபேசி அழைப்புகளை ஏற்க முடியாவிட்டாலோ அல்லது செய்திகளுக்குப் பதிலளிக்கத் தாமதமானாலோ, உங்கள் புரிதலைக் கோருகிறோம்.அவருடைய இறுதிச் சடங்குகள் ஒரு தனிப்பட்ட, குடும்ப நிகழ்வாக நடைபெறும். பெற்றோரையோ அல்லது அன்புக்குரிய பெரியவரையோ இழக்கும் வலியை அறிந்த அனைவரும், நாங்கள் அமைதியாகத் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை மதித்து, அவர் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் எங்களுக்குக் காட்டிய அதே சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான வலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்”” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர் .

admin

admin

Related Posts

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  “அண்டர் 18” !
News

விக்ராந்த் ,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “அண்டர் 18” !

by admin
May 30, 2026
ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!
News

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

by admin
May 30, 2026
“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!
News

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

by admin
May 30, 2026
மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!
News

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

by admin
May 29, 2026
தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !
News

தயாநிதி மாறன் மகன் நடத்திய விழாவில் நடிகர் அஜித் மகள் !

by admin
May 29, 2026

Recent News

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

May 30, 2026
அஜித் தாயார் மரணம்: முதல்வர்  விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

அஜித் தாயார் மரணம்: முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகினர் இரங்கல்!

May 30, 2026
“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

“எல்லோரையும் நம்பாதே” – ரவி மோகன் அறிவுரை!

May 30, 2026
மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

மகளுக்கு திருமணம்! பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!!

May 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?