Monday, June 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அர்ஜூன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகிறது!

admin by admin
June 21, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்லும் படமாக அமைந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

You might also like

மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!

கிரண் அப்பாவரம் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் !

“அதோமுகம்” கூட்டணியின் அடுத்த படைப்பு மேரேஜ் ஸ்டோரி!

இந்நிகழ்வினில்..,

நடிகர் யோகி பாபு பேசியதாவது..,

“அர்ஜூன் தாஸுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றி வருகிறேன். ஒரு ஹீரோவுக்கு நல்ல நண்பன் இருந்தாலே போதும், ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு நெருக்கமானது.

ஹரிஷை நான் இன்றல்ல, பல வருடங்களாக அறிவேன். பல படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே அவருடைய உழைப்பையும், சினிமா மீதான அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன். அவர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையை பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது கூட நான் அவரிடம், ‘நீ கண்டிப்பாக இயக்குநராக வேண்டும்’ என்று சொன்னவன்.

இன்று அவர் இயக்குநராக உருவாகி, அவரைப் பற்றி அனைவரும் இவ்வளவு பாராட்டிப் பேசுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே. இதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன், பெரிய படங்களை இயக்கி இன்னும் உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

அர்ஜூன் தாஸ் இந்தப் படத்திற்காக மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பும், தொழில்முறை அணுகுமுறையும் எப்போதும் என்னை கவர்கிறது. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.

இந்தப் படத்தின் முழுக் குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தனர். அந்த ஒற்றுமை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், உடை வடிவமைப்பாளர், உதவி இயக்குநர்கள் என அனைவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுடைய உழைப்பின் பலன் திரையில் தெளிவாகத் தெரியும்.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வேண்டிக்கொள்கிறேன். ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும், குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ‘கான் சிட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.”

நடிகை அன்னா பென் பேசியதாவது..,

“இது எனது இரண்டாவது தமிழ் திரைப்படம். ‘கொட்டுக்காளி’ படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன்.

இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடிப்பு பாணியும், வெளிப்பாடும், கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதனால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.

பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும், அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஹரிஷ் என்மீது முழு நம்பிக்கை வைத்தார். ‘நீங்கள் இதைச் செய்ய முடியும். இது வித்தியாசமாகவும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்’ என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த நம்பிக்கையே இந்தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது.

ஹரிஷிடம் நான் மிகவும் ரசித்த விஷயம் அவரது உறுதியான நம்பிக்கை. படப்பிடிப்பு தளத்தில் எந்த சவால் வந்தாலும், எந்த சந்தேகம் எழுந்தாலும், அவர் எப்போதும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அதை எதிர்கொண்டார். சினிமா மீதான அவரது காதலும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தப் படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பு அளவிட முடியாதது. படம் தொடங்கிய நாளிலிருந்து ஜூன் 26 வெளியீடு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாடல்கள், விளம்பரங்கள், புரமோஷன்கள், வெளியீடு என அனைத்திலும் அவர் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

அர்ஜூன் தாஸுடன் பலமுறை இணைந்து பணியாற்ற முயற்சி செய்திருந்தேன். இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது. ஒரு நடிகராக அவர் திறமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு மனிதராகவும் அவர் மிகவும் எளிமையானவர், அன்பானவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சமமாக மதித்து, மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்.

வடிவுக்கரசி மேம் ஒரு லெஜெண்ட். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு கனவு நிறைவேறிய அனுபவம். மூத்த கலைஞர்களுடன் பணியாற்றும்போது அவர்கள் பகிரும் அனுபவங்கள் எனக்கு எப்போதும் மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்தப் படப்பிடிப்பின் போது அவர் என்னுடன் நிறைய நேரம் செலவிட்டு, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தமிழ் வசனங்களைப் பேசுவதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்த பயத்தை போக்கவும் உதவினார்.

யோகி பாபு சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னுடைய ஆயுளை பத்து வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். காட்சிக்கு நடுவிலும், கேமரா பின்னாலும் அவர் சொல்வதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கும். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.

அகிலன் திரையில் எனது மகன். மிகவும் திறமையான மற்றும் அன்பான சிறுவன். ஃபாக்ஸி மற்றும் மற்ற கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில்தான் நான் முதன்முறையாக நடனமாடியிருக்கிறேன். அதற்காக சந்தோஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. சவாலான நடன அசைவுகளை நம்பிக்கையுடன் கற்றுக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார்.
‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கும், தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கும் அனைவருக்கும் நன்றி.”

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான திட்டமிடலுடன், முழு நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இந்தப் படத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் காட்டிய அர்ப்பணிப்பும், உழைப்பும், தன்னம்பிக்கையும் மிகவும் பாராட்டத்தக்கது.

இந்தப் படத்தை இவ்வளவு பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்த முயற்சி மிகப் பெரியது. நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் என இப்படத்திற்காக அவர்கள் செய்துள்ள புரமோஷன் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதற்காக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் வெளியீட்டில் இணைந்துள்ள அபிஹிம்சா பிலிம்ஸ், டெல்டா ஸ்டுடியோஸ் மற்றும் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து பாராட்டியவர்களுக்கும் எனது நன்றிகள்.

‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன, நகைச்சுவையும் இருக்கிறது, அதே நேரத்தில் மனதைத் தொடும் ஒரு அழகான கதையும் இருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அன்னா பென், வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு, அருள்தாஸ் மற்றும் மற்ற அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் உழைப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.
இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வாருங்கள். படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து மூத்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த மேடையில் நான் நன்றி சொல்ல வேண்டிய மிக முக்கியமான இரண்டு பேர் உள்ளனர். குனா ப்ரோ போஸ்ட் ஆபீஸ் மற்றும் விஜய் ப்ரோ (சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ்). இவர்கள் இருவரும் இல்லையென்றால் ‘பவர்ஹவுஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனமும், ‘கான் சிட்டி’ திரைப்படமும் உருவாகியிருக்காது. ஆரம்பம் முதல் இன்று வரை என்னுடன் நின்று உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

சினிமாவில் நான் எப்போதும் கடவுளிடம் வேண்டுவது நல்ல மனிதர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான். அந்த வகையில் எனது தயாரிப்பாளர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆடியோ உரிமையை பெற்றவர்கள், ஓடிடி உரிமையாளர்கள் என அனைவரும் இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.

என்னுடைய தொழில்நுட்பக் குழுவுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் ஃபாக்ஸி, எடிட்டர் அருள் மோசஸ், கலை இயக்குநர் ராஜ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடன இயக்குநர் சந்தோஷ் மற்றும் முழு தொழில்நுட்பக் குழுவும் இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர். வெறும் 55 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க அவர்களின் உழைப்பே காரணம்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரின் கூட்டணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்களும் எனக்கு மிகவும் சிறப்பானவை. குறிப்பாக இன்னும் வெளியாகாத பாடல்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நடிகர், நடிகைகள் பற்றி பேச வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அவரை தேர்வு செய்தது எனது வாழ்க்கையின் மிகச் சரியான முடிவுகளில் ஒன்று என்று சொல்லலாம்.

அன்னா பென் இந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அதேபோல் யோகி பாபு அண்ணா எனக்கு மிகவும் தனிப்பட்ட ஆதரவாக இருந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் படம் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர் அவர்தான். இந்தப் படத்திற்காக அவர் அளித்த ஒத்துழைப்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் சார் இந்தப் படத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் ‘கான் சிட்டி’ உருவாகியிருக்காது. மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

இறுதியாக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக என் மனைவிக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலேயே என்னை நம்பி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய கனவுக்காக என்னுடன் இருந்து அனைத்து கஷ்டங்களையும் தாங்கி வந்திருக்கிறார். இன்று இந்த மேடையில் நான் நிற்பதற்கு அவருடைய ஆதரவும் ஒரு முக்கிய காரணம்.

ஜூன் 26ஆம் தேதி ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் “கான் சிட்டி” திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

admin

admin

Related Posts

மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!
News

மர்மம் – சாகசம் நிறைந்த’நாகபந்தம்- (Nagabhandham)’  ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
June 21, 2026
கிரண் அப்பாவரம் நடிக்கும்  பான் இந்தியா திரைப்படம் !
News

கிரண் அப்பாவரம் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் !

by admin
June 20, 2026
“அதோமுகம்” கூட்டணியின் அடுத்த படைப்பு மேரேஜ் ஸ்டோரி!
News

“அதோமுகம்” கூட்டணியின் அடுத்த படைப்பு மேரேஜ் ஸ்டோரி!

by admin
June 20, 2026
 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்!
News

 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்!

by admin
June 20, 2026
சாத்தான் வேடத்தில் நடித்த இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ்!
News

சாத்தான் வேடத்தில் நடித்த இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ்!

by admin
June 20, 2026

Recent News

அர்ஜூன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகிறது!

அர்ஜூன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகிறது!

June 21, 2026
கிரண் அப்பாவரம் நடிக்கும்  பான் இந்தியா திரைப்படம் !

கிரண் அப்பாவரம் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் !

June 20, 2026
“அதோமுகம்” கூட்டணியின் அடுத்த படைப்பு மேரேஜ் ஸ்டோரி!

“அதோமுகம்” கூட்டணியின் அடுத்த படைப்பு மேரேஜ் ஸ்டோரி!

June 20, 2026
 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்!

 7 வயது மூத்த நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்!

June 20, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?