Thursday, October 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘டோரதி’: எனது தனிப்பட்ட வெற்றி ! -கார்த்திக் சுப்புராஜ்.

admin by admin
October 7, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுசென்னையில் நடந்தது.

இந்நிகழ்வில், இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,, “ஆணாதிக்கம், மாஸ் என நினைத்து நிறைய தவறான விஷயங்களை சினிமாவில் திணித்து கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் சம்பட்டியில் அடித்தாற்போலதான் ‘டோரதி’ வந்திருக்கிறது. ரோமியோ-ஜூலியட் போல ‘டோரதி’யும் அற்புதமான காதல் படம். இந்தப் படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்க வேண்டும். ஒளிப்பதிவு படத்தின் பலம். ராஜா சார் தன் இசையால் இந்தப் படத்தை ஆசீர்வதித்திருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

You might also like

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ் பாராட்டு !

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

‘ராமாயணா’ : தசரத மன்னராக அருண் கோவில்!

இயக்குநர் சசி, ” நான் ஒரு தமிழ் சினிமா இயக்குநர் என்பதில் பெருமை. அதற்கு காரணம் ‘டோரதி’. மூன்றாம் பாலினத்தவருக்காக ஒரு படம் செய்ய வேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முன்வந்திருப்பது பெரிய விஷயம். இன்னும் பெரிதாக அவர் ஜெயிக்க வேண்டும்”.

இயக்குநர் லிங்குசாமி, “பேரன்பும் தைரியமும் கொண்ட ஒருவரால் தான் இந்த ‘டோரதி’ மாதிரியான படம் எடுக்க முடியும். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு அது இருக்கிறது. இரண்டு முறை இந்த படம் பார்த்தேன். பேரன்போடு இந்தப் படம் எடுத்த கார்த்தியை வாழ்நாள் முழுக்க கொண்டாடலாம். ராஜா சாரின் இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம். ரஜினி- கமல் போல ரிஷி- சனந்த். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் மிஷ்கின், “‘டோரதி’ திரைப்படம் மூலம் திருநர் சமூகத்தை மிக உயர்ந்த இடத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் எடுத்து சென்றுள்ளார். சீர்கெட்ட சமூகத்தை ‘டோரதி’ மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார். வசூலை தாண்டி சிறந்த படமாக இது காலத்திற்கும் நிற்கும். இளையராஜாவை அடுத்து நான் கார்த்தி காலில்தான் விழ வேண்டும். இந்த படத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும். நம் எல்லோரையும் விட வாழ்க்கையை நன்கு புரிந்தவர்கள் திருநங்கைகள். சகிப்புத்தன்மையை இந்தப் படம் நமக்கு சொல்லி தருகிறது. காதுகள் இருப்பது இளையராஜா இசை கேட்க, கண்கள் இருப்பது டோரதி போன்ற படங்கள் பார்க்க. கடைசி விவசாயி, கொட்டுக்காளி படங்களை விட 100 மடங்கு சிறப்பான படம் டோரதி. மாஸ் ஹீரோ டெம்ப்ளேட்டை உடைத்து ரிஷி, சனந்த் பெரிய ஹீரோவாகி இருக்கிறார்கள். பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கீர்த்தி இந்தப் படத்தின் உயிர். நன்றி”.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, சக்திவேலன், “டோரதி படத்தின் வெற்றி விழாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த படத்தின் மீது பல கருத்து வன்முறைகள் படம் பார்க்காமலேயே ஆரம்பத்தில் கட்டவிழ்க்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இந்த வார இறுதியில் முதலிடம் பிடிக்கும். பல மாதங்கி, மரகதமணி, மீனாட்சி கொடுத்த ஆசீர்வாதம்தான் இது. ரிஷி, சனந்த் என இரு திறமையாளர்களை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி”.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ” சினிமா வலுவான ஆயுதம். மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்டது. திருநர் சமூகத்தை இதுநாள் வரை பார்த்த பார்வையை இந்த படம் நிச்சயம் மாற்றும் என பலர் என்னிடம் சொன்னார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி என கருதுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றியாகவும் பார்க்கிறேன். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் ராஜா சார் இசை. படத்தின் இன்னொரு ஹீரோ திரு சார். அனைவருக்கும் நன்றி” என்றார்.

admin

admin

Related Posts

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ்  பாராட்டு !
News

தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு நடிகர் தனுஷ் பாராட்டு !

by admin
October 7, 2026
3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !
News

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

by admin
October 7, 2026
‘ராமாயணா’ : தசரத மன்னராக  அருண் கோவில்!
News

‘ராமாயணா’ : தசரத மன்னராக அருண் கோவில்!

by admin
October 7, 2026
சித்தி இத்னானி, அஞ் சலி நாயர் நடிப்பில் உருவான,ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ !,
News

சித்தி இத்னானி, அஞ் சலி நாயர் நடிப்பில் உருவான,ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ !,

by admin
October 7, 2026
செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவான  ‘மானிடன்’.!
News

செந்தில் கே.வீரய்யா இயக்கத்தில் உருவான ‘மானிடன்’.!

by admin
October 7, 2026

Recent News

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா !

October 7, 2026
‘டோரதி’: எனது  தனிப்பட்ட வெற்றி ! -கார்த்திக் சுப்புராஜ்.

‘டோரதி’: எனது தனிப்பட்ட வெற்றி ! -கார்த்திக் சுப்புராஜ்.

October 7, 2026
‘ராமாயணா’ : தசரத மன்னராக  அருண் கோவில்!

‘ராமாயணா’ : தசரத மன்னராக அருண் கோவில்!

October 7, 2026
சித்தி இத்னானி, அஞ் சலி நாயர் நடிப்பில் உருவான,ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ !,

சித்தி இத்னானி, அஞ் சலி நாயர் நடிப்பில் உருவான,ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ !,

October 7, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?