பருத்தி வீரன் படத்தின் முத்தழகு கேரக்டராக வாழ்ந்து தேசிய விருதையும் பெற்றவர் பிரியாமணி. இவர் கடந்த சில வருடங்களாகவே மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரைக் காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சயதார்த்தமும் இரு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்நிலையில்,. வரும் ஆகஸ்ட் 23ம் தேதி இருவரும் மிகவும் எளிமையாக பதிவுத் திருமணம் செய்து கொள்ள உள்ளனராம். மேலும்,வரும் 24ம் தேதி பெங்களூருவில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.