நிவின்பாலி நாயகனாக நடிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. இப் படத்தை ’36 வயதினிலே’ ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். ‘பீரியாடிக் ஆக்சன்’ படமான இந்த படத்தை ‘ஸ்ரீ கோகுலம் மூவிஸ்’ சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார். கடந்த இரண்டு மாத காலமாக மங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இடை விடாமல் நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் .
வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய இப்படகுழு தடை விதித்துள்ளது. பிரம்மாண்ட , பிரத்தியேக செட்களின் சிறப்பு அவ்வாறானது. இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இப்படக்குழுவினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர் . படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்த இயக்குனர் ரோஷன் ஆண்டிரூஸ், கதாநாயகன் நிவின் பாலி மற்றும் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஆகியோர் இவர்களின் “திடீர்” வருகையால் மகிழ்ச்சியானார்கள்.

இது குறித்து இப்பட இயக்குனர் ரோஷன் ஆண்டிரூஸ் பேசுகையில், ” சூர்யா மற்றும் ஜோவின் இந்த ‘சர்ப்ரைஸ் விசிட்’ எங்கள் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூர்யா மற்றும் ஜோதிகாவுடனான எனது நட்பு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மேலும் வளர்ந்தது. பலமான, அழகான நட்பு எங்களுக்குள் உ
ள்ளது. எனது பட பிடிப்பு தளத்திற்கு அவர்கள் இருவரும் வந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தை பற்றிய தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் சூர்யா என்னிடம் கேட்டறிந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே அவர்களது இந்த ‘சர்ப்ரைஸ் விசிட் ‘. அவர்கள் இருவரும் எனக்கு எனது குடும்பம் போல் ” எனக் கூறினார்.