சமீபத்தில் வெளியான கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மனம் புண்படும்படியான ஒரு வார்த்தையும், காட்சியும் இடம் பெற்றிருப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில்அப் படத்திலிருந்து சர்சைக்குரிய அந்த வார்த்தையையும், காட்சியையும் நீக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து அப்படக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு,
‘‘இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப் படத்தில் காட்டப்படவில்லை.இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாக கருதுவதால் அதற்காக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொளவதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து ‘குற்றப்பரம்பரை’ என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.