ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள்.மற்றும்தம்பிராமய்யா, பரணி, நான்கடவுள்ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன்,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் – செந்தில் / ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ் இசை – அம்ரீஷ் / பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான். மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படாமாக உருவாகி உள்ளது “ பொட்டு “தமிழில் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு U/ A பெற்று, தெலுங்கு சென்சாருக்காக காத்திருந்த பொட்டு நேற்று தெலுங்கில் சென்சார் செய்யப்பட்டு U/ A சான்றிதழ் பெற்றுள்ளது.
எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.தெலுங்கில் NKR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.












